சி.பி.ஐ அலுவலகத்திலிருந்து காரிலிருந்தபடியே தொண்டர்களிடம் சிரித்த முகத்தோடு கையை அசைத்த விஜய்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் டெல்லியில் சி.பி.ஐ தலைமை களத்தில் நடைபெற்ற மூன்றாம் கட்ட விசாரணை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் இந்த விசாரணை நடைபெற்றது. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 15 ,2026 அன்று சுமார் 7 மணி நேரம் விஜய் இடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்னதாக ஜனவரி 12 மற்றும் 19ம் தேதிகளில் ஏற்கனவே இரண்டு முறை அவர் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். விசாரணை முடிந்து சி.பி.ஐ அலுவலகத்திலிருந்து வெளியே திறந்த வெளி காரிலிருந்து படியே தனது தொண்டர்களிடம் சிரித்த முகத்தோடு கையை அசைத்து சென்றார்.
Tags :


















