ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் இன்று உற்சாகமாக மக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரை
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் இன்று உற்சாகமாக மக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையை துவக்கி வைத்து பேசுகையில், "இந்த காந்தி ஜெயந்தி அன்று, நான் இங்கு இருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். 1925ல், சுதந்திர போராட்டத்தின் போது, மகாத்மா காந்தி, ஹசாரிபாக்கிற்கு விஜயம் செய்தார். பாபுவின் போதனைகள், எங்களின் அர்ப்பணிப்புகளுக்கு இன்றியமையாதவை. பாபுவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்," என்றார். ஒவ்வொரு பழங்குடியினக் குடும்பமும் அரசுத் திட்டங்களிலிருந்து பயனடைவதை உறுதிசெய்யும் நோக்கில், "தர்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உட்கர்ஷ் அபியான்" தொடங்கப்பட்டதை பிரதமர் மோடி எடுத்துரைத்த்ததோடு ஜார்கண்டின் ஹசாரிபாக்கில் 80,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், இதில் தர்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உட்கர்ஷ் அபியான் மற்றும் பல ஏக்லவ்யா மாதிரி குடியிருப்பு பள்ளிகள் அடங்கும். 63,000 கிராமங்களில் உள்ள 5 கோடிக்கும் அதிகமான பழங்குடி மக்கள் பயனடையும் பழங்குடியினர் நலன் மற்றும் மேம்பாட்டில் அரசாங்கத்தின் கவனம் செலுத்துவதை அவர் வலியுறுத்தினார்.
Tags :