அணு ஆயுதப் போர் உருவாகி விடுமோ என்று உலக நாடுகளை அச்சத்தில் ...
இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லா அமைப்பிற்கும் இடையே நடந்து வரும் சண்டையில் அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்படுவதோடு அவர்கள் வாழ்வாதாரங்கள் சின்ன வண்ணம் ஆக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.இஸ்ரேல் பேஜர், செல்லிடை பேசி வழியாக தாக்குதலை நிகழ்த்தியதில் லெபனானில் நூற்றுக்கணக்கான பேர் கொல்லப்பட்டனர். ஹெஸ்பொல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்கு பின்பு போரானது தீவிர படுத்தப்பட்டுள்ளது. எதிர்பாராத வேளையில் ஈரானிலிருந்து இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேல் கடும் கோபத்தில் உள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யாவும் களம் இறங்கியுள்ள நிலையில், இந்தியா போன்ற நட்பு நாடுகள் இருதரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றன. இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையே ஒரு வெப்பமான சூழ்நிலையே நிலவிக் கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் மூன்றாவது உலகப்போர் நிகழ்ந்து விடுமோ என்று பல நாடுகள் அச்சத்தில் உறைந்திருக்கின்றன. இஸ்ரேல் ஹெஸ்பொல்லா தீவிரவாத அமைப்பு மீதும் லெபனான் மீதும் கொண்ட கோபத்தின் காரணமாக காசா போன்ற பகுதிகள் தரை மட்டமாக்கப்பட்டதோடு மக்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர். இந்நிலையில், ஈரான் ஹெஸ் பொல்லா அமைப்பிற்கு ஆதரவாக இஸ்ரேலை தாக்கியது மிக பெரிய ஒரு பிரச்சனையை உருவாக்கியுள்ளது.. இரு தரப்பிலும் போரை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் இல்லாமல் ஒருத்தரை ஒருத்தர் அழிக்கும் முகமாகவே ஆவேசமடைந்து உள்ளது. அணு ஆயுதப் போர் உருவாகி விடுமோ என்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.. ஐநா சபை இதுகுறித்து விவாதித்து வருகிறது.
Tags :