மதுரையிலிருந்து தெலுங்கானா கச்சக்குடா ரயில் நிலையத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில்.

by Editor / 03-11-2022 10:33:56pm
மதுரையிலிருந்து தெலுங்கானா  கச்சக்குடா ரயில் நிலையத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில்.

மதுரையிலிருந்து தெலுங்கானாவில் உள்ள கச்சக்குடா ரயில் நிலையத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வண்டி எண் 07191 கச்சக்குடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் கச்சக்குடாவிலிருந்து நவம்பர் 7 முதல் ஜனவரி 30 வரை திங்கட்கிழமைகளில் 
இரவு 08.50  மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 08.45 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 07192 மதுரை - கச்சக்குடா வாராந்திர சிறப்பு ரயில் மதுரையிலிருந்து நவம்பர் 9 முதல் பிப்ரவரி 1 வரை புதன் கிழமைகளில் அதிகாலை 05.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மறுநாள் காலை 07.05 மணிக்கு கச்சக்குடா சென்று சேரும். இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம் விருத்தாச்சலம் விழுப்புரம் திருவண்ணாமலை காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நளகொண்டா, மல்காஜ்கிரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 

Tags :

Share via