11 வெண்பட்டு குடைகள் திருப்பதி தேவஸ்தானத்தில் அக்டோபர் ஏழாம் தேதி ஒப்படைக்கப்படும்

by Admin / 03-10-2024 11:28:48am
 11 வெண்பட்டு குடைகள் திருப்பதி தேவஸ்தானத்தில் அக்டோபர் ஏழாம் தேதி ஒப்படைக்கப்படும்

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்ற பிரம்ம ற்சவ விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 11 பெண் திருக்குடைகள் காலங்காலமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். இந்நிகழ்வின் தொடக்கமாக இன்று சென்னை சென்னவகேசவ பெருமாள் பக்தர்களால் வழங்கப்படும் வெண்கொடைகளை பூஜை செய்து ஊர்வலமாக எடுத்துச் செல்வர். பாரிமுனைபூக் கடையிலிருந்து யானை கவனி வழியாக புரசவாக்கம், அயனாவரம், வில்லிவாக்கம், ஜி .கே .எம் காலனி, ஜவகர் நகர், பெரியார் நகர் வழியாக திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடைபெறும்.. இந்தப் பகுதிகளில் திருப்பதி ஏழுமலையானுக்கு கோவில் போன்று வடிவமைக்கப்பட்ட இடங்களில் ஏழுமலையான்னுக்கு பூஜை நிகழ்த்தி கொடை ஊர்வலம் ஆயிரக்கணக்கான பக்தர்களோடு தொடரும் நிகழ்வு நடந்து கொண்டிருக்கின்றது. வழி நெடுக பக்தர்கள் ஏடல கொண்ட வாடா என்கிற முழக்கத்தோடு ஏழுமலையானை போற்றி முழக்கம் இட்டுக் கொண்டிருக்கிறார்கள். எங்கெங்கே திருக்குடை வருகிற பகுதிகளில் எல்லாம் அன்னதானம் வழங்குகிற நிகழ்வும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த 11 வெண்பட்டு குடைகள் திருப்பதி தேவஸ்தானத்தில் அக்டோபர் ஏழாம் தேதி ஒப்படைக்கப்படும் என்று விழா கமிட்டியினர் அறிவித்துள்ளார்கள்.

 

Tags :

Share via