உதகையில் 3 சுற்றுலா மையங்கள் மூடல்

நீலகிரி: உதகையில் 3 சூழல் சுற்றுலா மையங்கள் இன்று (ஜூலை 19) ஒரு நாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. கனமழை ஆரஞ்ச் அலர்ட் காரணமாக அவலாஞ்சி, பைன் மரக்காடு, 8வது மைல் டீ பார்க் ஆகிய சூழல் மையங்கள் மூடப்பட்டுள்ளன. விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் அதிகமாக வரக்கூடும் என்பதால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்ப்பட்டுள்ளது.
Tags :