இன்று எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தலைமையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை

by Admin / 14-03-2026 01:55:59pm
இன்று எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு  தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தலைமையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை

தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர்த ட்டுப்பாடு காரணமாக தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். எரிவாயு தட்டுப்பாட்டை சரி செய்வது மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்த பல்வேறு துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் விவாதித்தார். தமிழகத்தில் தற்போது உள்ள எரிவாயு சிலிண்டர்களின் தேவை மற்றும் கையிருப்பு நிலை குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. தலைமைச் செயலாளர், நிதிச் செயலாளர் மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐஓசி ,பாரத், ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.. இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் போதுமான கையிருப்பு இருப்பதாகவும் முதலமைச்சர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார் .இந்த விவகாரத்தில் தலையிட்டு சீரான எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். 

 

Tags :

Share via

More stories

Logo