மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து தி.கண்ணன்உடல் நலக்குறைவால் காலமானார்.

by Editor / 23-05-2023 08:04:19am
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து தி.கண்ணன்உடல் நலக்குறைவால் காலமானார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் (70) உடல் நலக்குறைவால் காலமானார. கருமுத்து தியாகராஜர் - இராதா தம்பதியரின் ஒரே மகன் ஆவார். இவர் மதுரை தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி மற்றும் தியாகராசர் மேலாண்மைக் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்தார். பல நூற்பாலைகளின் தலைவராகவும் இருந்துள்ளார். மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் தக்கார் ஆக 18 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில், உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

 

Tags :

Share via