உடுப்பி - மங்களூரு இடையே ஏற்பட்ட மண் சரிவு.

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் விரைவு ரயில், நேற்று மாலை 5.30 மணிக்கு நெல்லைக்கு வந்திருக்க வேண்டிய நிலையில், சுமார் 15 மணி நேரம் காலதாமதமாக இன்று காலை 7.30 மணிக்கு வருகை தந்துள்ளது. கர்நாடகாவில் உடுப்பி - மங்களூரு இடையே ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ரயில் தாமதம் என தகவல் வெளியாகியுள்ளது. மறுமார்க்கமாக ரயிலின் நேரம் மாற்றப்பட்டு நெல்லையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : உடுப்பி - மங்களூரு இடையே ஏற்பட்ட மண் சரிவு