அடர்ந்தவனப்பகுதியில் சிக்கியவர்களை காப்பாற்றிய செல்போன் சிக்னல்.
தமிழகத்தில் எல்லைப்பகுதியான தென்காசி மாவட்டம் அருகில் உள்ள ஆரியங்காவு வனப்பகுதிஅடர்ந்த வனப்பகுதியாக விளங்குவது ஆரியங்கா வனப்பகுதி இந்த வனப்பகுதிக்குள் உள்ள பாலருவியில் பொங்கல் பண்டிகை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் குளிக்க திரண்டு சென்றிருந்தனர்.பாலருவி பகுதியில் குளிக்கச் சென்ற நிலையில் அங்கு குளிக்க சென்ற இளைஞர்களை காணவில்லை என்கின்ற தகவல் மாலையில் பரபரப்பு ஏற்படுத்தியது.இதன் தொடர்ச்சியாக தென்மலை வனத்துறையினர்,தென்மலை போலீசாரும் அங்கு முகாமிட்டு காணாமல் போன இளைஞர்களை தேடினர் அந்த இளைஞர்கள் ஒரு பகுதியில் இருப்பதாக காவல்துறையினர் வனத்துறையினருக்கும் தகவல் கிடைத்தது தொடர்ந்து அந்த பகுதிக்கு வனத்துறையினரும் காவல்துறையினரும் சென்றனர். வனவிலங்குகள் நிரம்பிய பகுதியாக உள்ள அந்த பகுதியில் மிகவும் கவனத்தோடு வனத்துறையினர் இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.தென்காசியைசேர்ந்த ஆசிக்,ரியாஸ் ஆகிய இரண்டு இளைஞர்களும் குளிக்கச் சென்றவர்கள் ஆர்வத்தில் வனப்பகுதிக்குள் சென்று திரும்ப முடியாமல் தவித்துள்ளனர் இதன் தொடர்ச்சியாக ரோஸ் மலைப்பகுதியில் அவர்கள் வழி தெரியாமல் வனப் பகுதியில்சிக்கியதாக கூறப்படுகிறது ரோஸ் மலை பகுதியில் அலைபேசியில் டவர் கிடைத்ததால் தொடர்ந்து ஏதோ ஒரு நம்பருக்கு தொடர்பு கொண்டு தாங்கள் வழி தெரியாமல்வனப் பகுதியில் சிக்கியது குறித்து தெரிவிக்கவே அவர்கள் நம்பரில் தொடர்பு கொண்ட தென்மலை வனத்துறையினர் அதே இடத்தில் இருக்குமாறு அவர்கள் இருக்கும் லொகேஷனை அனுப்புமாறு தெரிவித்ததை தொடர்ந்து இந்த இரண்டு இளைஞர்களும் நள்ளிரவு 12 மணி அளவில் தென்மலை வனத்துறையினர் மற்றும் காவல் துறையினரால் மீட்கப்பட்டனர் இதன் தொடர்ச்சியாக அவர்கள் குறித்து தென்மலை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது குளிக்கச் சென்ற நபர்கள் வழி தவறி நடுக்காட்டில் சென்று சிக்கி வனத்துறையினரள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Tags : அடர்ந்தவனப்பகுதியில் சிக்கியவர்களை காப்பாற்றிய செல்போன் சிக்னல்.