திமுக விசிக இடையிலான முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

by Admin / 02-03-2026 11:54:29pm
திமுக விசிக இடையிலான முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

திமுக விசிக இடையிலான முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

 விசிக தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் பொதுச் செயலாளர் ரவிக்குமார் சிந்தனை செல்வன் ஆகியோர் அடங்கிய குழு திமுக குழுவுடன் சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தியது. கடந்த 2011 தேர்தலில் ஒதுக்கப்பட்ட 12 இடங்களை தற்போது கட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப இரட்டை இலக்கை எண்ணிக்கையில் இடங்களை வழங்க வேண்டும் என்று விசிக கோரிக்கையை முன் வைத்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் மூன்று இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று விசிக தரப்பு கோரிக்கையை முன் வைத்துள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்லவென்று வலதுசாரி சக்திகளை தடுக்கும் பொறுப்புணர்வுடன் கூட்டணி வெற்றிக்காக தாங்கள் செயல்படுவதாகவும் திமுகவுடன் பேரம் பேசும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

Tags :

Share via
Logo