ஆவினில் விரைவில் நாட்டு பசும்பால் கிடைக்கும் - அமைச்சர் ஆவடி நாசர்

by Editor / 15-10-2021 06:59:29pm
ஆவினில் விரைவில் நாட்டு பசும்பால் கிடைக்கும் - அமைச்சர் ஆவடி நாசர்


தமிழ்நாடு அரசின் ஆவின் பால் மூலம் நாட்டு பசுவின் பால் விற்பனைக்கு செய்ய இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுவை மிகுந்த சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனைக்காக அறிமுகப்படுத்தினார் பால்வளத்துறை அமைச்சர் நாசர். காஜு கட்லி, ஜாங்கிரி, லட்டு, பால் பேடா, பால் கோவா போன்ற இனிப்பு பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு இனிப்பு பெட்டியையும் அமைச்சர் அறிமுகம் செய்தார்.


ஆவினில் புதிதாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இனிப்பு வகைகள்:
காஜூ கட்லி 250 கிராம் - ரூ.225, நட்டி மில்க் கேக் 250 கிராம் - ரூ.210, ஸட்ஃப்டு மோதி பாக் 250 கிராம் - ரூ.170,காஜூ பிஸ்தா ரோல் 250 கிராம் - ரூ.275,காபி மில்க் பர்ஃபி 250 கிராம் - ரூ.210வகைப்படுத்தப்பட்ட இனிப்புகள் - 500 கிராம் - ரூ.425
இதனை அறிமுகம் செய்துவிட்டு பேசிய ஆவடி நாசர், 'இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 25 டன் இனிப்புகளை விற்க வேண்டும் என இலக்கு நிர்ணயத்து ரூ.2.5 கோடி மதிப்பில் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.


மேலும் 1 லிட்டர் பாலை கால்நடை விவசாயிகளிடம் இருந்து 32 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக தெரிவித்த அவர், தமிழ்நாடு அரசின் ஆவின் பால் மூலம் நாட்டு பசுவின் பால் விற்பனைக்கு செய்ய இருப்பதாக கூறியுள்ளார். ஆவின் நிறுவனத்தில் ஏற்படும் நஷ்டத்தை குறைக்க, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க உள்ளதாகவும், இந்த ஆண்டு ஆவிம் இனிப்பு வகைகள் அதிக நுகர்வோரை சென்றடையும் வகையில் சில மாற்றங்களுடன் தயாரித்து 50% விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

 

Tags :

Share via