டிவி தலையில் விழுந்து குழந்தை பலி

by Staff / 14-10-2022 02:33:00pm
டிவி தலையில் விழுந்து குழந்தை பலி

 திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசேன். இவரது 2 வயது மகன் சூபியன். சம்பவத்தன்று குடும்பத்தாருடன் சதாம் உசேன் வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் டிவி பார்த்துக் கொண்டிருந்த சூபியன், டிவி ஸ்டாண்டை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது குழந்தை மீது டிவி விழுந்துள்ளது. இதில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது குழந்தையின் தலையில் டி வி விழுந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை சூபியன் பரிதாபமான உயிரிழந்துள்ளான்.

 

Tags :

Share via

More stories