ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் தோல்வி

by Staff / 08-12-2022 04:39:59pm
ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் தோல்வி

குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட இசுதன் காத்வி தோல்வியடைந்தார். கம்பாலியா தொகுதியில் போட்டியிட்ட அவர், பாஜக வேட்பாளர் ஐயர் முலுபாய் ஹர்தாஸ்பாய் பெராவிடம் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.காங்கிரஸ் வேட்பாளர் அர்ஜன் பாய் மூன்றாவது இடத்தில் உள்ளார். தொலைக்காட்சி பத்திரிகையாளரான இசுதன், 2021 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். தற்போது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இருப்பினும் ஆம் ஆத்மி 5 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

 

Tags :

Share via

More stories