மருந்துக்கு பதிலாக செலுத்தப்பட்ட நீர்.. 10பேர் பலி

by Staff / 06-01-2024 03:56:34pm
மருந்துக்கு பதிலாக செலுத்தப்பட்ட நீர்.. 10பேர் பலி

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் மெட்போர்டு நகரில் அசாந்தே ரோக் மண்டல மருத்துவ மையம் அமைந்துள்ளது. இதில் கடந்த 2022ஆம் ஆண்டு அடுத்தடுத்து 10 நோயாளிகள் உயிரிழந்தனர். இதனையடுத்து கடந்த மாதம் மருத்துவமனை சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் மருத்துவமனை முன்னாள் ஊழியர் மருந்துகளை திருடியிருக்கக்கூடும் என புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு கிருமி நீக்கம் செய்யப்படாத குழாய் நீரை ஊசி வழியாக வலி நிவாரணியான பென்டன்டைல்க்கு பதிலாக குடுத்தது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo