டேங்கர் லாரி மோதி விபத்து; ஒருவர் பலி

by Staff / 28-09-2023 02:22:26pm
டேங்கர் லாரி மோதி விபத்து; ஒருவர் பலி

நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் செல்வராஜ் இவர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடிக்கு சென்றனர். அங்கு மீன்களை ஏற்றிக் கொண்டு லாரியில் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வேனை டிரைவர் மில்டன் ஓட்டி சென்றார்.   நேற்று அதிகாலை 1 மணி அளவில் நெல்லை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலை வல்லநாடு துப்பாக்கி சுடுதளம் தாண்டி முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் கியாஸ் லாரியை வேன் முந்தி சென்றுள்ளது. உடனே இடது புறமாக வேனை டிரைவர் திருப்பி உள்ளார். இதனால் டேங்கர் லாரியின் முன்புறத்தில் வேன் மோதி விபத்துக்குள்ளானது. கண்இமைக்கும் நேரத்தில் சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வேன் இருந்த 6 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். தொழிலாளி செல்வராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருந்த 5 பேரும் படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்தனர்.. இதுகுறித்து தகவல் அறிந்து முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வராஜ் உடலை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via
Logo