சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது

by Staff / 28-09-2023 01:32:24pm
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பெயிண்டர் போக்சோ  சட்டத்தில் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடத்தூர் காவல் நிலைய பகுதியில் 9 வயது சிறுமியிடம்; பாலியல் வன்கொடுமை செய்த பெயிண்டர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியும், அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் நேற்று கூலித்தொழிலாளி தனது 4 வது படிக்கும் 9 வயது மகளை மனைவியிடம் இருந்து தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இன்று வேலைக்கு சென்ற போது, மகளை, எலத்தூர் செட்டிபாளையத்தில் உள்ள நாகராஜ்(40) என்பவரது வீட்டில் மகளை விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளார். பெயிண்டராக வேலை செய்து வந்த நாகராஜ், வீட்டில் இருந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். சிறுமி அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வரவே அருகில் இருந்தவர்கள், சிறுமியை மீட்டு, அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்து ஈரோட்டில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories