இன்று சென்னை நத்தம் பக்கத்தில் பெண்கள் உச்சி மாநாட்டினை தொடங்கி வைத்தார், தமிழக முதலமைச்சர் மு ..க. .ஸ்டாலின்
இன்று சென்னை நத்தம் பக்கத்தில் பெண்கள் உச்சி மாநாட்டினை தொடங்கி வைத்தார், தமிழக முதலமைச்சர் மு ..க. .ஸ்டாலின்
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகம் மையத்தில் இரண்டு நாள் மாநாடு நடைபெறுகிறது பெண்களின் வேலை வாய்ப்பு பாதுகாப்பு மற்றும் பணியிடங்களில் அவர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மாநாடு நடத்தப் படுகிறது. மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்நாட்டு பிரமுகர்கள் தொழில் வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர் .பெண்களின் திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான 11 முக்கிய தலைப்புகளில் 70-க்கும் மேற்பட்ட கருத்தாளர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர் .தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடத்தப்படுகிறதுமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், தாட்கோவின் முதலமைச்சர்விடியல் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மகளிர்க்கு தொழில் தொடங்க கடனுதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் .வழங்கினார். .நாளை நடைபெறும் நிறைவு விழாவில் ,தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்க உள்ளார்.
மகளிர் விடியல் பயணம் மேற்கொள்ளும் வகையில் பத்து பிங்க் பேருந்துகள், மகளிர் பாதுகாப்பிற்காக பயன்படுத்திடும் வகையில் மகளிர் காவலர்களுக்கான வாகனங்கள், மகளிருக்கான பிங்க் ஆட்டோக்கள் ஆகியவற்றின் சேவைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Tags :



















