அப்சரா கொலை வழக்கு.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

by Editor / 26-03-2025 02:39:10pm
அப்சரா கொலை வழக்கு.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஹைதராபாத் சரூர் நகரில் நடந்த பரபரப்பான அப்சரா கொலை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த இந்த கொலையில் குற்றவாளியான பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கு ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அப்சரா வற்புறுத்தியதால் அவரை கொலைசெய்து கழிவுநீர் தொட்டியில் போட்டுள்ளார். இந்நிலையில் சாய்க்கு ஆயுள் தண்டனை மற்றும் கூடுதலாக 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via