சிறுமி பாலியல் வழக்கு- 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

by Editor / 26-03-2025 02:43:16pm
சிறுமி பாலியல் வழக்கு- 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கோவையில் 11 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவரது தாத்தா மற்றும் சித்தப்பா ஆகிய இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். வகுப்பில் சிறுமி சோர்வாக இருப்பதை கண்ட ஆசிரியை விசாரித்துள்ளார். அப்போது சிறுமிக்கு அவரது 75 வயது தாத்தா மற்றும் 33 வயது சித்தப்பா ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியை சைல்டு லைன் உதவியுடன் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், சிறுமி 2-ம் வகுப்பு படிக்கும்போதிருந்து தாத்தாவும், கடந்த ஜனவரி மாதம் முதல் சித்தப்பாவும் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. கைது மற்றும் குண்டர் சட்டம்: இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக இருந்த இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மகளிர் காவல் ஆய்வாளர் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில், மாநகர காவல் ஆணையர் இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நேற்று உத்தரவிட்டார்.

 

Tags :

Share via