முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஏப்., 17) அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. மாலை 6.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் உள்ளிட்டவை வழங்கப்படும் தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக, பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர் நியமனம் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
Tags : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்.