புதுச்சேரி வந்தார் துணை குடியரசுத் தலைவர்

by Editor / 12-09-2021 12:03:10pm
புதுச்சேரி வந்தார் துணை குடியரசுத் தலைவர்

துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

ஹெலிகாப்டரில் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் என். ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.லாசுப்பேட்டை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, கார் மூலம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள பாரதியார் இல்லத்திற்கு சென்று, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 

Tags :

Share via

More stories

Logo