திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்: முதல்வர் பேச்சு

by Staff / 27-04-2023 01:11:24pm
திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்: முதல்வர் பேச்சு

அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். விழுப்புரத்தில் கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், 'மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். குடிநீர், பட்டா வழங்குதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அண்ணா மறுமலர்ச்சி திட்டங்களை வேகப்படுத்த வேண்டும். களஆய்வின் நோக்கம் நிறைவேறி வருவதில் மகிழ்ச்சி என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo