பள்ளி தலைமை ஆசிரியருக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை

by Staff / 27-04-2023 01:21:18pm
பள்ளி தலைமை ஆசிரியருக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை

தூத்துக்குடியில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சின்ன கொல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாமஸ் சாமுவேல் (வயது 57). இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். கடந்த 2022-ம் ஆண்டு, அந்த பள்ளியில் படித்த 9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாமஸ் சாமுவேலை கைது செய்தனர். இந்த வழக்கில் 23. 6. 2022 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.10 மாதங்களுக்கு பின் தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது இதில் 14  ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo