புதுடெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 55 ஆவது அவசரக் கூட்டம் மதியம் நடைபெறுகிறது

by Admin / 11-08-2026 10:57:14am
 புதுடெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 55 ஆவது அவசரக் கூட்டம் மதியம் நடைபெறுகிறது

இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139 வது கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதுடெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 55 ஆவது அவசரக் கூட்டம் மதியம் காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்..கே .ஹல்தர் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு கர்நாடகா கேரளா புதுச்சேரி மாநிலங்களின் அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டிய எண்பத்தி எட்டு டிஎம்சி நீரை திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில் 15 நாட்களுக்கு திணறே சரி 3500 கன அடி தண்ணீரை திறக்க உத்தரவிட்டதை கர்நாடகா நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை சுட்டிக்காட்டவும் இந்த கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொகுத்த அவசர மனு மீதான விசாரணை நாளை மறுநாள் வரவுள்ளது.

 

Tags :

Share via
Logo