“நன்றி மறந்தவர் வைகோ" - கடுமையாக சாடிய ஜெயக்குமார்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “வைகோவை தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அவர் நன்றி மறந்தவர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது, அதிமுக கூட்டணியில் இணைந்தார். அதன் பிறகே மதிமுகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. அவர்களுக்கு எம்பி பதவிகளும் கிடைத்தன. ஆனால், தற்போது ‘ஜெயலலிதாவை சந்தித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு’ என வைகோ கூறுவது கண்டனத்திற்குரியது” என்றார்.
Tags :