பாரதிய ஜனதா கட்சி சாா்பாக போட்டியிடும் 195 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

by Admin / 03-03-2024 10:03:10am
 பாரதிய ஜனதா கட்சி சாா்பாக போட்டியிடும் 195 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பாரதிய ஜனதா கட்சி, பாராளுமன்றத்தோ்தலில் போட்டியிடும் 195 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை முதற்கட்டமாக வெளியிட்டுள்ளது.

இப் பட்டியலில்,பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் காந்தி நகரில் போட்டியிடுகிறார் .ராணுவ அமைச்சர் ராஜநாத் சிங் லக்னோ தொகுதியிலும் ஸ்ருதி ரானிஅமேதி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், இப்பொழுது அமைச்சர்களாக இருக்கும் 34 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் புதுடில்லியிலும் கேரளா காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சர்மான ஏகே அந்தோணியின் மகன் அனில் ஆண்டனி பத்தன திட்டா தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.. மலையாள நடிகர் சுரேஷ்கோபி திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்..

 

 

Tags :

Share via