கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் உதைத்த கணவன் தூக்கிட்டு தற்கொலை.

செங்குன்றம் எம்.கே காந்தி தெருவில் வசிக்கும் 27வயதான பாபு என்பவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி எல்லம்மாள் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.இவர் வீட்டின் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் கனவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்த பாபு தீடீரென மனைவியின் வயிற்றில் காலால் எட்டிஉதைத்துள்ளார்.இதனால்அவரது மனைவி வயிறு வலியால் துடித்துள்ளார் இதனைத்தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நடந்த சம்பவத்தை தினமும் நினைத்து நினைத்து மன உளைச்சலுக்கு ஆளான பாபு தீடீரென வீட்டிலுள்ள படுக்கை அறைக்கு சென்று மனைவியின் புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றிய தகவல் செங்குன்றம் போலீசாருக்கு தெரியப்படுத்தியதின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இறந்த பாபுவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags :