வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை என தகவல்

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து டெல்லி விமான நிலையத்தில் விஸ்தரா விமானத்தில் சோதனை நடத்தியதில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். புனே செல்லவிருந்த விஸ்தாரா விமானத்தை டெல்லி விமான நிலையத்தில் அதிகாரிகள் இன்று சோதனையிட்டனர். கட்டாய பாதுகாப்பு சோதனைகள் காரணமாக UK971 விமானம் தாமதமானது என்று விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குருகிராமில் உள்ள டெல்லி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் (DIAL) கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் உடனடியாக இறக்கப்பட்டனர்.
Tags :