விவசாயிகளுக்கு இந்த  ஒப்பந்தத்தின் மூலமாக எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.

by Admin / 08-02-2026 12:01:08am
 விவசாயிகளுக்கு இந்த  ஒப்பந்தத்தின் மூலமாக எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.

இந்தியா -அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய வர்த்தக அமைச்சர்  பியூஸ் கோயல்செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற கூற்றை அவர் திட்டவட்டமாக மறுத்ததோடு, இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு பொருளும் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் உறுதி அளித்ததோடு பால் பொருள்கள், தானியங்கள், இறைச்சி மற்றும் கோழிப்பண்ணை பொருள்கள் போன்ற உலர்திறன் மிக்க விவசாய பொருளுக்கு இறக்குமதி வரி சலுகைகள் வழங்கப்படவில்லை என்றும் அமெரிக்காவிலிருந்து எந்த ஒரு மரபணு மாற்றப்பட்ட உணவுகளும் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்., மாறாக, இந்திய விவசாய பொருள்களான தேயிலை ,காபி, மசாலா பொருட்கள் ,முந்திரி மற்றும் பல்வேறு பழங்கள் அமெரிக்க சந்தைக்கு பூஜ்ஜிய வரியில் ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் ஆப்பிள் போன்ற சில பொருள்களுக்கு குறைந்தபட்ச இறக்குமதி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார் .உதாரணமாக, ஆப்பிள்களுக்கு  80 ரூபாய் என்ற குறைந்தபட்ச விலை நிர்ணயிப்பதன் மூலம் உள்ளூர் ஆப்பிள் விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அதனால் விவசாயிகளுக்கு இந்த  ஒப்பந்தத்தின் மூலமாக எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தினார்.

 

Tags :

Share via

More stories