மதுசூதனன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

by Editor / 06-08-2021 09:22:59am
மதுசூதனன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடலுக்கு  தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை காலமானார். அவருடைய மறைவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் சசிகலாவும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இருந்தார் 

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின்  சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மதுசூதனன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவர் மதுசூதனன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.ஏற்கனவே மதுசூதனன் மறைவுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் 

 

Tags :

Share via