உக்ரைன் - ரஷியா போர் முடிவுக்கு வருமா

by Staff / 29-03-2022 02:41:05pm
 உக்ரைன் - ரஷியா போர் முடிவுக்கு வருமா

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்றோடு 34-வது நாள் ஆகிவிட்டது. ஒரு மாதம் கடந்து விட்டாலும் உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் உக்ரைனின் பல நகரங் களை சுற்றிவளைத்துள்ள ரஷியா தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. ரஷிய படைகளுக்கு உக்ரைன் படைகளும் சளைக்காமல் ஈடு கொடுத்து போரிட்டு வருகிறது.  

ரஷியாவின் தாக்குதலால், பொதுமக்கள் பலரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 39 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து இருப்பதாக ஐநா அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

 
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறபோதும், இன்னொரு புறம் சமரச பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான அடுத்த சுற்று பேச்சு வார்த்தை, துருக்கியில் நேற்று  நடைபெற்ற நிலையில்,  உக்ரைன் ரஷியா இடையே யான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் இந்த வாரம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று நடைபெற்ற பேச்சுவார்தையில் எந்தவித  முன்னேற்றம் எதுவும் ஏற்பட வில்லை .இதனிடையே ரஷியாவுடன் நடுநிலை நிலைமை குறித்து விவாதிக்க உக்ரைன் தயாராக உள்ளது என்று ரஷிய பத்திரிகையாளர் களிடம் ஜெலென்ஸ்கி கூறினார்.

 

Tags :

Share via