சட்டப்பேரவை குழு உறுப்பினர்களை பேரவை தலைவர் நியமித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்குகிறது. இதன் காரணமாக சட்டப்பேரவை குழு உறுப்பினர்களை பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் நியமித்துள்ளார். இக்குழுவில் தமிழக முதலமைச்சர் விஜய், ஊரக வளர்ச்சி அமைச்சர் என் ஆனந்த், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார், அமைச்சர் ராஜேஷ் குமார், அமைச்சர் வன்னியரசு, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ. வேலு, பாட்டாளி மக்கள் கட்சி சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் ஆய்வு நில குழுவில் இடம் பெற்றுள்ளனர்.தினசரி சட்டமன்ற கூட்டங்கள் எத்தனை மணி நேரம் நடைபெற வேண்டும் மொத்தம் எத்தனை நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என்பதை எல்லாம் இந்த குழுவில் ஆலோசித்து இறுதி முடிவு செய்யப்படும்.
Tags :







.jpg)











