வெள்ளை அறிக்கை மூலமாக உங்கள் ஆட்சியின் தவறுகளை மறைக்க பார்க்கிறீர்களா?
கடந்த 2001 இல் இருந்து 2026 வரையிலான திமுக ஆட்சி காலத்தை மட்டுமே கொண்டு வெள்ள அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது ஏன்? அதற்கு முந்தைய அதிமுக ஆட்சி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. ஒருவேளை நீங்கள் சொன்னது போன்று தீர்ந்து போன கட்சி என்பதாலா? இல்லை ,வெள்ளை அறிக்கை மூலமாக உங்கள் ஆட்சியின் தவறுகளை மறைக்க பார்க்கிறீர்களா? என்று அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியதோடு, நல திட்டங்களுக்கு செலவிடப்படக்கூடிய பணம் மூலதனத்தைச் சார்ந்ததா? கடந்த 2006 இல் இருந்து இரண்டு மடங்காக கடன் தொகை உயர்ந்து தான் வந்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்றவற்றிற்கெல்லாம் செலவழிக்க கூடிய தொகை மூலதன செலவா? நீங்கள் ஆரம்பித்திருக்கிறீர்களே? சிங்கப்பெண் படை .அதற்கு ஆகக்கூடிய செலவு எதில் சேரும் . நீங்கள் ஐந்து ஆண்டுகள் ஆட்சியை தொடர்ந்து நடத்தி முடித்து விட்டு செல்லும் பொழுது.... நீங்கள் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதியின் படி பார்த்தால் 20 லட்சம் கோடி கடனாக இருக்கும். நீங்கள் சொல்லிய தேர்தல் வாக்குறுதிக்கு 6 லட்சம் கோடி வரை பணம் தேவைப்படும் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள் நலத் திட்டங்களை நிறுத்திவிட்டு பாருங்கள் .எவ்வளவு செலவினங்கள் குறைக்கப்படுகிறது என்பதை. அதனால் எதையும் முழுமையாக அறிந்து கொண்டு வெள்ளை அறிக்கை விடப்பட்டிருக்க வேண்டும். பல்வேறு இடங்களில் லீக்கேஜ் இருக்கிறது என்பது உண்மைதான் திமுக ஆட்சியில் வணிகவரித்துறை செயலாளராக இருந்த இன்று நிதி செயலாளராக இருக்கின்ற சித்திக் ஏன் அப்பொழுது அந்த லீக்கேஜை அடைக்கவில்லை. நீங்களே எங்களை பாராட்டி இருக்கிறீர்கள்?, பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன . எங்களுடைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மூலதனங்களைப் பற்றியெல்லாம் நீங்கள் தெரிவித்திருக்க வேண்டும். உங்களுடைய ஆட்சியில் ஐம்பதாயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்தாலும் கூட ஆறு லட்சம் கோடி செலவாவது தவிர்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.
Tags :



















