14 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க முயன்ற பஞ்சாயத்து தலைவர்
ஒடிசா மாநிலத்தின் ஷோலோகர் கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக உள்ளவர் துத்து தாஸ். இவர் அதே ஊரை சேர்ந்த 14 வயது சிறுமியை பல முறை பலாத்காரம் செய்ததன் விளைவாக அவர் கர்ப்பமானார். இதையறிந்த தாஸ் கர்ப்பத்தை மாத்திரைகள் கொடுத்து கலைக்க முயன்றதோடு சிறுமியின் கர்ப்பம் குறித்து வெளியில் சொல்லக் கூடாது என அவர் குடும்பத்தாரை மிரட்டியிருக்கிறார். ஆனால் பெண்கள் சுயஉதவி குழுவினர் இதை அறிந்து போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னர் தாஸை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Tags :



















