லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பாடுகளை மறு சீரமைக்கும் நோக்கில்புதிய குழுவை அமைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி

by Admin / 01-08-2026 01:04:53pm
 லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பாடுகளை மறு சீரமைக்கும் நோக்கில்புதிய குழுவை அமைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பாடுகளை மறு சீரமைக்கும் நோக்கில் தலைமைச் செயலாளர் தலைமையில் புதிய குழுவை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டு உள்ளார். இக்குழுவை நாலு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் அக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையை நாலு மாதங்களுக்குள் சமர்ப்பித்து அரசு அது மீது மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதோடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு முழு நேர ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளதோடு லஞ்ச ஒழிப்புத்துறை கீழ்நிலை ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவது போன்று உயர் அதிகாரிகள் மீதான புகார்களுக்கு அக்கறை காட்டப்படவில்லை என்றும் ஊழல் என்பது சமூகத்தில் ஆழமாக வேரூன்றி அன்றாட நிகழ்வாகிவிட்ட காரணத்தினால் நேர்மையான அதிகாரிகளால் கூட லஞ்சம் கொடுக்காமல் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதி வேதனையுடன் கருத்தை முன் வைத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo