ராகுல் காந்தி பா.ஜகவும் திரிணாமுல் காங்கிரசும் மறைமுக ஊழலில் ஈடுபடும் கட்சி என்று குற்றச்சாட்டு

by Admin / 14-04-2026 07:47:17pm
ராகுல் காந்தி பா.ஜகவும் திரிணாமுல் காங்கிரசும் மறைமுக ஊழலில் ஈடுபடும் கட்சி என்று குற்றச்சாட்டு

இன்று  பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவருமான ராகுல் காந்தி மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் ராய்கஞ்ச் மற்றும் மால்டா பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும்பொழுது ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரண்டு கட்சிகளையும் அவர் கடுமையாக விமர்சித்தார். நரேந்திர மோடி அதானி விவகாரத்தில் ஊழலில் ஈடுபடுகிறார் என்றால் திருநா முள் காங்கிரஸ் அந்த ஊழல் பந்தயத்தில் சளைத்தது அல்ல என்றும் மேற்கு வங்கத்தில் சாரதா மற்றும் ரோஸ் வேலி போன்ற நிதி நிறுவன மோசடிகளை குறிப்பிட்டு அவர்  திாிமுணால்காங்கிரஸ் உறுப்பினர்களால் நடத்தப்படும் சிண்டிகேட் மூலம் ஊழல் பணம் ஒரு சிலருக்கு செல்கிறது என்றும் இதனால் மாநில மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியதோடு திாிமுணால்காங்கிரசின் ஊழல் மற்றும் மோசமான நிர்வாகமே மேற்கு வங்கத்தில் பாஜக வளர வழிவகை செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பாஜகவும் அரசியல் சாசனத்தை அளிப்பதாகவும் தேர்தல்களில் வெல்ல முடியாத இடங்களில் வாக்குத்திருட்டியில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார் . திாிமுணால் காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிப்பதாகவும் குற்றம் சுமத்தினார்.

ராகுல் காந்தி பா.ஜகவும் திரிணாமுல் காங்கிரசும் மறைமுக ஊழலில் ஈடுபடும் கட்சி என்று குற்றச்சாட்டு
 

Tags :

Share via

More stories

Logo