போதை மாநிலமாக மாறிவிட்டது தமிழ்நாடு - பிரேமலதா

by Editor / 11-04-2024 09:04:59am
 போதை மாநிலமாக மாறிவிட்டது தமிழ்நாடு - பிரேமலதா


தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே தேமுதிக வேட்பாளர் பெ. சிவநேசனை ஆதரித்து நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், நமது வேட்பாளர் வெற்றி பெற்றால் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்.திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடே போதை மாநிலமாக மாறிவிட்டது 

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். தஞ்சாவூர் முழுவதும் லாட்டரி விற்கப்படுவதால், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பேருந்து கட்டணம், பால் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை போன்றவை உயர்ந்து விட்டன. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த இத் தேர்தலைப் பயன்படுத்தி தேமுதிகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டிபேசினார்.
 

 

Tags :  போதை மாநிலமாக மாறிவிட்டது தமிழ்நாடு - பிரேமலதா

Share via