சென்னையில் கொலை ராமநாதபுரம் ரவுடி கைது

by Staff / 20-03-2024 02:35:47pm
சென்னையில் கொலை ராமநாதபுரம் ரவுடி கைது

திருவொற்றியூர் பூங்காவனபுரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (35). இவரது தம்பி ரஞ்சித் (30). கடந்த மாதம் 7ம் தேதி 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்குள் புகுந்து ஓட ஓட விரட்டி ரஞ்சித்தை வெட்டினர். இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை திருவொற்றியூர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ரஞ்சித் தன்னை வெட்டியவர்களை பழிவாங்குவதற்காக 3 கொலை உள்பட 10 வழக்குகளில் தொடர்புடைய பாலாஜி (எ) பாலா (30) என்ற ரவுடியை ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வரவழைத்து அண்ணன் மணிவண்ணன் உதவியுடன் வீட்டில் தங்க வைத்துள்ளதாக திருவொற்றியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை அதிரடியாக போலீசார் பூங்காவனபுரம் பகுதிக்குச் சென்றனர். அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பாலாஜியையும், தொடர்புடைய ரஞ்சித்தையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து ரஞ்சித், பாலாஜியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். தம்பி ரஞ்சித்துக்கு உடந்தையாக செயல்பட்டாரா என்பது குறித்து மணிவண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories