ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ மீது தாக்குதல்
சென்னையில் அண்மையில் ரவுடியை சுட்டுப் பிடித்த எஸ்.ஐ. கலைச்செல்வி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
டி.பி.சத்திரத்தில் மதுபோதையில் தகராறு செய்த சீதா என்ற பெண்ணை விசாரிக்க சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. எஸ்.ஐ. கலைச்செல்வியை போதையில் இருந்த சீதா கீழே தள்ளி தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
Tags :