நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்

by Staff / 31-10-2023 02:26:23pm
நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வு அச்சத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், தேர்வை ரத்து செய்வதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் எரவார் கிராமத்தைச் சேர்ந்த பைரவி என்ற அரசுப் பள்ளி மாணவி, நீட் தேர்வில் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையும், வருத்தமும் அடைந்தேன். மாணவி பைரவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

Tags :

Share via

More stories