மின் இணைப்பு துண்டிப்பு எஸ்எம்எஸ் வந்தால் பதற்றம் வேண்டாம்

by Staff / 31-10-2023 02:38:14pm
மின் இணைப்பு துண்டிப்பு எஸ்எம்எஸ் வந்தால் பதற்றம் வேண்டாம்

மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எஸ்எம்எஸ் வந்தால் பதற்றம் வேண்டாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் கட்டணம் செலுத்த சொல்லி செல்போனில் மெசேஜ் வந்தால் எச்சரிக்கை இருக்க வேண்டும்.பணம் செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டும் என அச்சுறுத்தி பண மோசடி நடைபெற்று வருகிறது.மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வரும் எஸ்எம்எஸ்களை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo