சுடுகாட்டில் கிடந்த துப்பாக்கி ஒப்படைப்பு..

by Staff / 04-12-2023 05:03:05pm
சுடுகாட்டில் கிடந்த துப்பாக்கி ஒப்படைப்பு..

சென்னை புழல், அண்ணா நினைவு நகரைச் சேர்ந்தவர் சிஜி. bதனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று மாலை, புழல் போலீசாரிடம் கைத்துப்பாக்கி ஒன்றை ஒப்படைத்தார்.போலீசார் நடத்திய விசாரணையில், புழல் மாநகராட்சி சுடுகாட்டுக்கு அவரது அண்ணன் புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்த, அக். , 25ல் சென்றுள்ளார். அங்கு, அவரது காலில் பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட 'பார்சல்' தட்டுப்பட்டது. அதன் உள்ளே ஒரு கைத்துப்பாக்கி இருந்துள்ளது.பாதுகாப்பாக எடுத்து வந்து, வீட்டில் அதை வைத்துள்ளார். குடும்பத்தினர் துப்பாக்கியை பார்த்து, சிஜியை கண்டித்துள்ளனர். இதையடுத்து அவர், புழல் போலீசாரிடம் கைத்துப்பாக்கியை ஒப்படைத்துள்ளார்.எப்போது கூப்பிட்டாலும் விசாரணைக்கு வர வேண்டும் என, அவரிடம் எழுதிய வாங்கிய போலீசார், அவரை வீட்டுக்கு அனுப்பினர். துப்பாக்கியின் பின்னணி குறித்து விசாரிக்க, அதை ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo