தென்காசி கரடி தாக்கி மூன்று பெண்கள் படுகாயம் - பொதுமக்கள் சாலை மறியல்.

by Staff / 07-08-2025 11:53:08am
தென்காசி  கரடி தாக்கி மூன்று பெண்கள் படுகாயம் - பொதுமக்கள் சாலை மறியல்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்திற்கு இன்றைய தினம் வேலைக்கு சென்ற மூன்று பெண்களை அப்பகுதியில் சுற்றித்திரிந்த கரடி ஒன்று கடித்து காயப்படுத்திய நிலையில், தற்போது கரடி தாக்கப்பட்டதில் காயம் அடைந்த ராமலக்ஷ்மி, அம்பிகா, சேவு ஆகிய மூன்று பெண்களும் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து ஒரு பெண் மட்டும் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

 இந்த நிலையில், இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது வன விலங்குகளால் விவசாய பயிர்களும், விவசாயிகளும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வருவதாக கூறி புளியங்குடி பகுதியில் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 அவர்களிடம் தற்போது புளியங்குடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், கரடி தாக்கியதாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags : கரடி தாக்கி மூன்று பெண்கள் படுகாயம் - பொதுமக்கள் சாலை மறியல்.

Share via