கஞ்சா விற்பனை செய்த நபர் கைது
கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த ரயில்வே கேட் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நேற்று துடியலூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் தகவல் கிடைத்த இடத்தில் திடீர் ஆய்வு செய்தனர்.அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 19 வயதான ஹரிகுமார் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 1கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து இது குறித்த அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றதாக, இன்று துடியலூர் போலீசார் தங்களது அறிக்கையில் தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags :



















