இந்தியாவின் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு

by Admin / 03-12-2025 01:52:01am
இந்தியாவின் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு

இந்தியாவின் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 2026 முதல் பிப்ரவரி 2027 வரை இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .இது நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். கொரோனா காலத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதமான நிலையில், பதினாறாவது இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு திட்டங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது .

முதல் கட்ட நிலையில், பெயர், வயது ,பாலினம் ,கல்வி, தொழில், மதம் மற்றும் சாதி போன்ற தனிப்பட்ட அளவிலான தரவுகளை சேகரிக்கப்படும்., கணக்கு எடுப்பு பிப்ரவரி 2027 இல் நடத்தப்படும் ,தேதி மார்ச் 1 2027 ஆகும் .லடாக் ,ஜம்மு -காஷ்மீர் ,இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் செப்டம்பர் 2026 , அக்டோபர் 1-இல் நடத்தப்படும்.. மொபைல் செயலிகள் மூலம் தரவு சேகரிக்கப்படும். மேலும் சுய கணக்கெடுப்புக்கு ஆன்லைன் முதன்மையாக இருக்கும். சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அனைத்து சமூகங்களுக்கும் சாதி தரவுகளை சேகரிப்பதற்கும் இது வாய்ப்பளிக்கும். முந்தைய நடைமுறையில், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மட்டுமே கணக்கிடப்பட்டதிலிருந்து இது குறிப்பிடத்தக்க நகர்வாக கருதப்படுகிறது. இந்த செயல்முறை ஒரு வலை போர்டல் மூலம் கண்காணிக்கப்படும். துல்லியமான கவரேஜ் மற்றும் நிகல் நேர பிழை கண்டறிதலை உறுதி செய்ய ஜி.பி.எஸ் ஒருங்கிணைப்பு மற்றும் புவி வேலியை பயன்படுத்தும். பிழைகளை குறைப்பதற்கும் தரவு செய்லாக்கத்தை வரைபடுத்துவதற்கும் முன்பே ஏற்றப்பட்ட விருப்பங்களும் கூடிய புதிய டிஜிட்டல் குறியீட்டு முறை பயன்படுத்தப்படும்..

இந்தியாவின் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு
 

Tags :

Share via