சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு ஒன்னே முக்கால் மணிக்கு மேல் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு ஒன்னே முக்கால் மணிக்கு மேல் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் மழை. ஏற்கனவே இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் நகரத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கையை முடங்கச் செய்திருக்கின்றது. இந்நிலையில் ஆரஞ்சு விடுக்கப்பட்டிருந்த சென்னைக்கு கனமழையானது பெய்து கொண்டிருக்கிறது. சென்னை வியாசர்பாடி, பெரம்பூர், மணலி புதுநகர், திருவொற்றியூர் ,வண்ணாரப்பேட்டை மற்றும் முக்கியமான தாழ்வான ரோடுகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்ற நிலை காணப்படுகின்றது. மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடங்களில் பணிகளை மெட்ரோ பணியை சேர்ந்த நிறுவன ஊழியர்கள் தண்ணீர் அடைப்பை சரி செய்து வருகின்றனர்.
இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
Tags :



















