தென்மாவட்டங்களில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு.

by Editor / 22-11-2021 09:12:16am
தென்மாவட்டங்களில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு.

தென் மாவட்டங்களான தூத்துக்குடி நெல்லை இராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை மறுநாள் மழை தொடங்கும். தினசரி மழை பெய்யும். நவம்பர் 23,24,25 26 ஆகிய நான்கு நாட்களை பொறுத்தவரை தென் கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் ஆனால் தொடர் மழையாக இருக்காது. மழை வெயில் என மாறி மாறி வானிலை நிலவும். 27 ம்தேதி முதல்  தென் கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடையும். தூத்துக்குடி நெல்லை தென்காசி இராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பல இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது.என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via
Logo