சட்டமன்ற பேரவை உறுப்பினர்களுக்கானஇரண்டு நாள் புத்தாக்க பயிற்சி முகாமை குத்து விளக்கேற்றி தமிழக முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்

by Admin / 16-06-2026 02:52:18pm
சட்டமன்ற பேரவை உறுப்பினர்களுக்கானஇரண்டு நாள் புத்தாக்க பயிற்சி முகாமை குத்து விளக்கேற்றி தமிழக முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்

சென்னை கலைவாணர் கலை அரங்கில் தமிழக முதலமைச்சர் விஜய் 17ஆவது சட்டமன்ற பேரவை உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.புத்தாக்க பயிற்சி தமிழக வெற்றிக்கழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் பொதுவாக நடத்தப்படுகிறது. இப்ப பயிற்சியில் பேரவையில் உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய மாண்புகள் நடைமுறைகள் விதிகள் விவாதங்களில் பங்கேற்பது கேள்வி எழுப்புவது போன்ற நடைமுறை செயல்பாடுகள் குறித்து அரசு துறை செயலர்கள், துறை போதிய வல்லுநர்கள் மூலம் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. முகாமில் பேசிய சட்டப்பேரவை தலைவர் ஜே. சி .டி .பிரபாகரன் 17ஆவது சட்டப்பேரவைக்கு தேர்வாகி உள்ளவர்களில் 146 பேர் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்றும் புதிய உறுப்பினர்கள் ஜனநாயகத்தின் முழுமையான நிலையை புரிந்து கொள்வதற்கு முந்தைய சட்டமன்ற கூட்டத்துறையில் பேசிய உரைகளையும் வாசிக்க வேண்டும். நூலகங்களுக்கு சென்று வரலாற்று சம்பந்தமான விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

Tags :

Share via
Logo