பட்டா பெயர் மாற்றம் செய்ய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம்-கிராம நிர்வாகஅலுவலர் கைது
திருவள்ளூர் மாவட்ட கும்முடிபூண்டி அடுத்த தண்டலஞ்சேரி கிராம நிர்வாக அலுவலராக இருக்கும் பிரபு ,சாலம்மாள் என்பவரது நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்ததாா். இதற்கு கிராம நிர்வாக அதிகாரி ஒரு லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் பேரம் பேசி 50 ஆயிரம் ரூபாய் தருவதாக ஒத்துக் கொண்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சாலம்மாள் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதனை அடுத்து அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணத்தை பிரபுடம் கொடுக்கச் சொல்லி அனுப்பி வைத்தனர். கிராம நிர்வாக அதிகாரிக்கு பணம் பெற்றுக் கொடுக்கும் இடைத்தரராக இருந்த பாபு வசம் சாலம்மாள் கொடுக்க பணத்தைக்கொடுக்க முயன்றபொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பணத்தை பெற்றுக் கொள்ளும் பொழுது கையும் களவுமாக இருவரையும் பிடித்து கைது செய்தனர்.
Tags :













.jpg)




